WEHub இன் ஆரம்ப நிகழ்வும் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடலும்” நிகழ்வின் சில பதிவுகள்.

WEHub இன் ஆரம்ப நிகழ்வும் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடலும்” நிகழ்வின் சில பதிவுகள்.

நேற்றைய தினம் (09.03.24) கிளிநொச்சியில் நடைபெற்ற “WEHub இன் ஆரம்ப நிகழ்வும் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடலும்” நிகழ்வின் சில பதிவுகள்.

WEHub ஆனது பெண் முயற்சியாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர்களுக்கு மேலும் வலுவூட்டும் செயற்பாடுகளை செய்ய உள்ளது. பெண் முயற்சியாளர்கள் அவர்களுக்கு ஏதுவான நேரத்தில் WEHub அலுவலகத்திற்கு வருகை தந்து அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவும், துறை சார் வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறக் கூடியதாகவும் இருக்கும்.

நேற்றைய தினம் வசந்தன் தாசன் (Inventor | Mentor), முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றினை எவ்வாறு வெற்றி காண முடியும், எவ்வாறு சர்வதேச சந்தைக்கு பொருட்களை/ சேவைகளை விரிவு படுத்தலாம் போன்ற விடயங்களைப் பற்றி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து திருமதி சுகந்தினி சிவகுமார் (Founder of Livegreen Pvt Ltd), காளான் வளர்ப்பு தொடர்பாக ஒரு ஆரம்ப வழிகாட்டலை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக காளான் வளர்ப்பில் கூடிய ஆர்வம் உள்ளவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் ஒரு பயிற்சிப்பட்டறையினை ஒழுங்கு செய்யவும் WEHub உத்தேசித்துள்ளது.

இந்த நிகழ்வில் 25 இற்கும் மேற்பட்ட பெண் முயற்சியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

———————————————————

Captures from the WEHub launch and Entrepreneurs meet which was held in Kilinochi yesterday (09.03.24)

WEHub is a structured support system for women entrepreneurs to help them navigate any challenges they face and grow their business. Women entrepreneurs can visit the WEHub anytime convenient for them and get support. They can also come and work in the co-working space exclusively available for women entrepreneurs. There will also be sessions conducted continuously to support them enhance their knowledge in various areas.

Yesterday inventor and mentor Dr. Vasanthan Dasan had an enlightening discussion with the entrepreneurs on challenges they face and how to overcome those challenges and navigate successfully, how to get international market access and many more. Following that founder of Livegreen Products Mrs. Suganthiny Sivakumar conducted an introductory session on mushroom cultivation. There will also be in depth training on Mushroom cultivation in the weeks to come.

#WEHub#YIT#YarlITHub#Jaffna#Women#Kilinochchi

+6

All reactions:

4343

Leave a Reply