Yarl Geek Challenge-14 Junior க்கான வலய ரீதியான பயிற்சி பட்டறையில் வலிகாமம் கல்வி வலய மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையானது கடந்த திங்கட்கிழமை (26/05/2025) வலிகாமம் கணனி வள நிலையத்தில் மதியம் 2 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இடம்பெற்றது. இதில் வலிகாம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் போட்டிக்கு விண்ணப்பித்த மற்றும் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ள மாணவர்கள் என 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.
மேலும் நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே வளவாளர்களால் பயிற்சி பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் புத்தாக்க போட்டி தொடர்பான அறிமுகம் மற்றும் மாணவர்களின் புத்தாக்கம் தொடர்பாக அவர்களின் குழு மற்றும் தனிச் செயற்றிட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் பெறப்பட்டு, பிரச்சனைகள், கையாளும் வழிமுறைகள், அபிவிருத்தி செய்ய வேண்டிய செயற்பாடுகள் போன்றன தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலமாக மாணவர்கள் அடுத்த கட்ட நகர்வான வலய ரீதியான போட்டிகளுக்கு தயார்படுத்தப்பட்டனர்.
Yarl Geek Challenge-14 Junior போட்டி பற்றி தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் : https://www.yarlithub.org/ygc-junior
Yarl Geek Challenge-14 Junior’s zone workshop for Valikamam Education Zone students was held last Monday (26/05/2025) at Valikamam Computer Resource Station from 2pm to 4pm. More than 40 students participated eagerly in schools in education sector who applied for competitions and were eager to participate.
Workshops were initiated by individual resources for four more categories along with introduction to innovation competition and explanation of students regarding their team and individual projects regarding students’ innovation, discussed with students regarding issues, handling methods, activities to be developed etc. Through this, students are prepared for the next level of moving zonal competitions.
Learn about Yarl Geek Challenge-14 Junior Contest and apply: https://www.yarlithub.org/ygc-junior