Yarl Geek Challenge-14 Junior புத்தாக்கப் போட்டிக்கான வலய ரீதியான அறிமுக கருத்தரங்குகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. அதில் வடமராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை(05/04/2025) யா/ஹாட்லிக் கல்லூரியில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை நடைபெற்றிருந்தது. இதில் வடமராட்சி கல்வி வலய பாடசாலை மாணவர்களில் போட்டிக்கு விண்ணப்பித்த, மற்றும் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ள மாணவர்கள் என 90க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.
இதில் போட்டி தொடர்பான அறிமுகம், போட்டி விதிமுறைகள், விண்ணப்பப்படிவம் தொடர்பான விபரங்கள் மற்றும் நான்கு போட்டிப் பிரிவுகள் (Web Application Development, Hardware Application Development, Mobile Application Development, Application of Science) தொடர்பிலும் தனித்தனியாக விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்களின் புத்தாக்க திறன்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சில கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
Regional introductory seminars for the Yarl Geek Challenge-14 Junior Innovation competition are currently being held. In that, the seminar for the students of Vadamaratchi Education Zone School was held last Saturday (05/04/2025) at Ya/Hatlick College, starting at 9.00 am till 12.00 noon. More than 90 students eagerly participated in the Vadamaratchi Education Zone School students who applied for the competition and were eager to participate.
In this, individual explanations were given regarding competitive introduction, competitive terms, application formation details and four competitive categories (Web Application Development, Hardware Application Development, Mobile Application Development, Application of Science). Some discussions were also held aimed at encouraging students’ innovative skills.