Entrepreneurship Club Workshops in Jaffna

You are currently viewing Entrepreneurship Club Workshops in Jaffna
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 14 பாடசாலைகள் பாடசாலை முயற்சியாண்மைக் கழகத்தில் 2025 இல் புதிதாக இணைந்து கொண்டுள்ளன. இப்பாடசாலைகளுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 22/02/2025 அன்று இடம்பெற்றிருந்தது. இதில் 08 பாடசாலைகள் இணைந்திருந்தன.
இப் பயிற்சி பட்டறையில் பாடசாலை முயற்சியாண்மைக் கழக அறிமுகம், பாடசாலைகளில் எவ்வாறான தொழில் முயற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம், அவற்றிற்கு எவ்வாறான Business Model Canvas பயன்படுத்தலாம், முயற்சியாண்மை கழகத்தில் மாணவர்கள் இணைந்து கொள்வதால் எவ்வாறான ஆளுமைகள் விருத்தியடைகின்றன, முயற்சியாண்மை கழகத்தின் தொழிற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் முயற்சியாண்மை திறனை வளர்ப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். உங்கள் பாடசாலைகளிலும் முயற்சியாண்மை கழகத்தை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால் event@yarlithub.org என்ற மின்அஞ்சல் முகவரியில் எங்களுடன் இணையுங்கள்.
 
14 schools from Jaffna district are newly enrolled in the school initiative club in 2025. The workshop for this school was held last 22/02/2025. There were 8 schools connected to this.
In this workshop, schools are introduced to the Entrepreneurship Club, how students can take businesses in schools, how the Business Model Canvas can be used for them, how personalities develop as students join the Entrepreneurship Club, and many other factors including professionals of the Entrepreneurship Association.
We are ready to develop entrepreneurship skills among students. If you are interested in building an initiative club in your schools too, join us at event@yarlithub.org.
 

Leave a Reply